முன்னேற்றப்பாதையில் வாழ்க்கை....
வாழ்க்கையில் வரும்
இன்பங்களும் பெரும் துன்பங்களும் சில சமையங்களில் எதிர்காலத்தையே மாற்றி
விடுகிறது, இருந்தாலும் அப்போது மனதில் எளும் கேள்விகளுக்கு காலம் பதிலளித்து
விடுகிறது.வாழ்க்கையில் காலம் மனிதனின் எதிர்காலத்தின் உயர்வையும் தாழ்வையும்
நிர்னையித்து விடுகிறது. ஆனால் மனிதனோ காலத்தை உணராமல் வாழ்க்கையில் தவறுகளை
செய்கிறான்.ஒவ்வொறு தவறுகளுக்கும் மனிதனே மூல காரணமாகின்றான்.
அதை உணர்ந்து கொண்டால் மனிதன் வாழ்க்கையில்
தவறுகளை ஒருபோதும் செய்யமாட்டான். நாட்டில் வளரும் வன்முறைகளுக்கும் இது ஒரு
தீர்வாக அமையும்.
வாழ்க்கையை வாழ மட்டுமே கடவுள் கொடுத்துள்ளார்.
நம்மை நாமே அழித்துக்கொள்வதற்க்கு இல்லை. நாட்டுப்பற்று கண்டிப்பாக தேவை தான்
ஆனால் அதுவே வெறி ஆகி விடக்கூடாது.
செய்கின்ற உதவியை இடையிலேயே
நிறுத்தி விட்டால் அது பகைமைக்கு வழி வகுக்கும். ஆகவே நாம் உதவிக்கும் ஓர் வரைமுறை
வைத்துக்கொள்ள வேண்டும். எது நமக்கு தேவை என்று நினைகின்றோமோ அதை மட்டுமே நாம்
பெற்றுக்கொள்ள வேண்டும். அதிகமான ஆசை சில சமையங்களில் நமது வாழ்க்கை பாதையை மாற்றி
விடும். மனிதன் தன்னையும் உணரவில்லை தான் எதற்காக படைக்கப்பட்டோம் என்றும்
உணரவில்லை. அவன் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் மட்டுமே வருந்துகிறான்.
ஆனால் அவன் தன்னை இவ்வுலகத்தில் நிலைப்படுத்திக்கொள்ள தவறி விட்டான். ஆனால் இது
தவறு இல்லை மாறாக இது அவனின் அறியாமை.
நம்மில் ஒருவருக்கும் தன்னம்பிக்கையும்
சாதிக்கவேண்டும் என்று வெறி இருந்தால் போதும் வாழ்க்கையில் நிகழாதவற்றை
நிகழ்த்திக்காட்டலாம். இது நமக்கு வாழ்க்கையில் நம்மை நிலைப்படுத்திக்கொள்ள ஒரு
வாய்ப்பை வழங்கும்
உலகில் அறிவியல் எவ்வளவோ முன்னேறி
இருந்தாலும் வாழ்க்கைப்பாடம் எனும் புத்தகம் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தேவை
படுகிறது...